அரசு தனியார் நிறுவனங்களில் யோகா இடைவேளை அமல்

அரசு தனியார் நிறுவனங்களில் யோகா இடைவேளை அமல்

Share it if you like it

பணியின் போது ஏற்படும் சோர்வு, மன உளைச்சல், நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டைத்தை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான சோதனை திட்டம் துவங்கவுள்ளது. இது குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக மூத்த ஆதிகாரிகள் கூறியதாவது.

பணியில் ஏற்படும் சோர்வு, மற்றும் நெருக்கடி போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு யோகா இடைவேளை திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

டில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம் இதற்கான எளிய பயிற்சி முறையை வடிவமைத்துள்ளது. பல நிறுவனங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு. இந்த எளிய பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயிற்சி வகுப்பு அல்ல. யோகா குறித்து ஒரு அறிமுகமே. நாற்காலியில் எப்படி உட்கார வேண்டும், உடல் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை பயிற்சி முறைகள் தெரிவிக்கப்படும். இத

ற்கான கையேடு மற்றும் சில நிமிட வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து ஊழியர்களும் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தை செயல்படுத்த டாடா கெமிக்கல்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்பட 15க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த திட்டத்தை அனைத்து நிறுவனங்களிலும் செயல்படுத்தும்படி தொழில் அமைப்புகளிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


Share it if you like it