அல்கொய்தா எனும் அரக்கன்

அல்கொய்தா எனும் அரக்கன்

Share it if you like it

செப்டம்பர் 11  உலக வரலாற்றில் அவ்வளவு எளிதில் மறக்க இயலாத நாளாகும்.  2001 செப்டம்பர் 11 உலக மக்களை ஒருகணம் அதிர்ச்சியடைய செய்த நாள்,  உலகவல்லரசான அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு இரையான நாள்.  ஆம் இதே நாளில் தான் உலகவர்த்தக இரட்டைகோபுர கட்டிடம் அல்கொய்தா பயங்கரவாதிகளால்  விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. 

இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதத்தின் கோரமுகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியது. இத்தாக்குதலில் 3000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.  

அதுவரை இந்தியா போன்ற ஆசிய நாடுகளே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்தநிலையில்  அமெரிக்க மக்களுக்கு அன்று தான் அதன் கொடுமை புரிந்தது.  இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு பத்தாண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டான்.

இந்த நிகழ்வு பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் சொர்க்கபூமி என நிரூபணமானது. பயங்கரவாதம் எந்நிலையில் இருந்தாலும் அதனால் அழிவு மட்டுமே நிச்சயம்! 


Share it if you like it