Share it if you like it
மகாராஷ்டிரா ஆளுநரை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மகாராஷ்டிரா அரசியல் நாட்டையே திரும்பி பார்கவைத்துள்ளது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றதுவரை மகாராஷ்டிரா அரசியல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் சிவசேனா தலைமையிலான கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.
Share it if you like it