Share it if you like it
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் கோவில்களில் பூஜைகள் நடைபெறலாம். ஆனால் பெரிய உற்சவம் நடைபெறக்கூடாது, நான்கு பேருக்கு மேல் இருக்கக்கூடாது, என்று மாநில அரசும், அறநிலையத்துறையும் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடவுளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுவதை அந்த கோவிலில் தலைமை கிளர்க்காக பணிபுரிகின்ற அந்தோணி என்கிற கிறிஸ்துவ மிஷனரி தடை செய்துள்ளார். இந்த சம்பவம் ஹிந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை கோவிலில் நடத்தலாம் என்று அரசே ஆணையிட்ட பிறகு கோவில்களில் பணிபுரியும் ஒரு கிறிஸ்துவ மிஷனரி எப்படி தடை செய்யலாம். இந்த அதிகாரத்தை யார் அவருக்கு கொடுத்தது. அறநிலையத்துறையும் இந்த சம்பத்தை எல்லாம் பார்த்து மௌனமாக உள்ளது. இதனால் அந்த மிஷினரியை பணியிடை நீக்கமும் செய்யாமலும், கண்டிக்காமலும் அறநிலையத்துறை அவருக்கு ஜால்ரா அடித்துள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
- இதுவே ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெறுகின்ற ஜெபக்கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா ? ஹிந்துக்கள் என்றால் மட்டும் அவ்வளவு ஏளனமாக உள்ளதா. இதுபோல் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த கிறிஸ்துவ மிஷனரி மீதும் இதை கண்டுக்காமல் விட்ட அறநிலையத்துறை மீதும் தமிழக அரசு கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.
Share it if you like it