வாரணாசி மாநகரில் ஆர்.எஸ்.எஸ்யின் மெகா ஷாகா கும்பமேளா முதன்முறையாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 15 அன்று நடைபெறும் ஷாகா கும்பமேளாவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஷாகா கும்பமேளாவில் பங்கேற்கும் ஸ்வயம்சேவகர்கள் காசி மாநகரில் உள்ள 215 ஷாகாக்களை சேர்ந்தவர்களாவர். ஷாகா கும்பமேளா, நகரின் வடக்கு, தெற்கு என இருபகுதிகளாக நடைபெறவுள்ளது. வடக்கு பகுதிக்கு சம்பூர்ணன்ட் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்திலும், தெற்கு பகுதிக்கு சீர் கோவர்தன் பகுதியிலும் நடைபெறவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜில்லா பிரச்சார் பிரமுக் ஸ்ரீ. ராஜேஷ் ரஞ்ஜன் ” இந்த கும்பமேளா தனித்துவமானது. ஏனெனில் இத்தகைய பெரிய அளவில் இதற்கு முன்னர் நாங்கள் நடத்தியது இல்லை. ஷாகா நடக்கும் பகுதிகளில் தங்களது பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன. நடைபெறவுள்ள ஷாகா கும்பமேளா ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேலும் வளர்ச்சிடைய ஏதுவாக உள்ளது. 8.30 – 10.30 என இரண்டு மணிநேரம் நடைபெறும் மெகா ஷாகா கும்பமேளாவானது, இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. முதல் ஒரு மணிநேரம் நடைபெறும் அமர்வில் ஷாகாவில் வழக்கமாக நடைபெறும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்து காண்பிக்கப்படும். அடுத்த அமர்வில் சொற்பொழிவு நடைபெறும். பிராந்த பிரச்சாரக் ஸ்ரீ. ரமேஷ் அவர்கள், சீர் கோவர்தன் பகுதியில் நடைபெறும் ஷாகா கும்பமேளாவில் சொற்பொழிவாற்றவுள்ளார்.
அதேபோன்று க்ஷேத்ர பிரச்சாரக் ஸ்ரீ. அனில் அவர்கள், சம்பூர்ணண்ட் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் சொற்பொழிவாற்றவுள்ளார். ஷாகா கும்பமேளாவை சிறப்பாக நடத்திட ஆய்வுக்கூட்டம் கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. இதே போன்று மற்றொரு ஆய்வுக்கூட்டம் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று பிரயாக் மாநகரில் நடைபெற்றது” என்றார்.
Very proud