1962ல் இந்தியாவின் மீது சீனா தாக்குதல்கள் நடத்தியபோது, “ஏகாதிபதியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மக்கள் சீனம் வருகிறது” எனவும். மாவோ தான் எங்கள் தோழர், தலைவர், என்று கோஷம் போட்டனர் இங்குள்ள தீவிர கம்யூனிஸ்டுகள்
இந்தியாவிலிருந்த தீவிர கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாகவே சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் குரல் எழுப்ப துவங்கினர். இந்த கம்யூனிஸ்ட்களின் தேச விரோத போக்கினை கண்டு பிரதமர் நேருவே கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே இரு வேறு கருத்துக்கள் எழுந்தது, அன்றைய சோவியத் யூனியனுக்கும், சீனாவிற்கும் கருத்து ரீதியான மோதல் வந்த பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே ஒரு அணி சீனாவிற்கும் மற்றொரு அணி சோவியத் யூனியனையும் ஆதரித்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. அப்படி உருவானது தான் CPI(M) கட்சி. இன்று இந்த CPI(M) சாதாரண கட்சி அல்ல! இந்தியாவிலேயே மிகவும் பணக்கார கட்சிகளில் ஒன்று . இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது யாருக்கும் தெரியாது.
பாராளுமன்றத்தில் இவர்களுக்கு செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரவச் செய்வதில் இவர்களுக்கு மிகப் பெரிய நெட்வொர்க் உண்டு. இடதுசாரி கருத்தியலை சார்ந்து இருக்கும் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை, இலக்கியம், மொழியியல், போன்ற துறைகளுக்கான மத்திய அமைப்புகளில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும், போர் வந்தாலும் வராவிட்டாலும் எந்த சூழ்நிலையிலும் இவர்கள் சீனாவிற்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை. “இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, பல தேசங்களின் கூட்டமைப்பு” என்று இந்தியாவில் இயங்கும் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளுக்கு கருத்தியல் ரீதியாக பாயிண்டுகள் எடுத்துக் கொடுத்து அவர்களை மறைமுகமாக தூண்டி வருவதும் இவர்கள் தான்.
பிரிவினைவாதிகளின் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவே இவர்களது பேச்சுகளும், எழுத்துகளும், எப்போதும் இருக்கும். காங்கிரஸ் கட்சியானது அமைப்பு ரீதியாக தான் நமக்கு எதிரி, ஆனால் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளோ ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலனுக்கே எதிரானவர்கள். இந்த உண்மையை எப்படி நண்பர்களிடம் எடுத்துச் செல்வது என்று சில சமயம் புரிவதில்லை.
–வெங்கடேஷ் V