கோவில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஜூன் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும்-இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கோவில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஜூன் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும்-இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Share it if you like it

தொடர் ஊரடங்கால் மக்கள் மனங்களில் உள்ள அழுத்தம் குறைய ஆலய வழிபாடு அவசியம் என கடந்த மே 26ஆம் தேதி கோயில் முன்பு சமூக இடைவெளியோடு தோப்புக்கரணம் போடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது.

இந்து ஆலய வழிபாடு என்பது கூட்டு வழிபாடு கிடையாது. அதனால், தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது, பொது சுகாதாரம் பேணுவது எளிதானது. காலை, மாலை வேளைகளில், 3 முதல் 4 மணி நேரம், சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து முக்கிய சன்னதிகளில் மட்டும் தரிசனத்திற்கு அனுப்ப வழி ஏற்படுத்த முடியும்.

ஆனால், அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகம் ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆலயங்களை நிரந்தரமாக இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு, தவறை உணர்ந்து மனம் திருந்தி கோவில்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it