இந்தியாவை அவமானப்படுத்த நினைத்து மூக்குடைந்த தோழர் – பொங்கி எழுந்த அஹமதாபாத் விமான நிலையம்

இந்தியாவை அவமானப்படுத்த நினைத்து மூக்குடைந்த தோழர் – பொங்கி எழுந்த அஹமதாபாத் விமான நிலையம்

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா, டொராண்டோவில் இருந்து குஜராத் அஹமதாபாத் விமான நிலைதிற்கு வந்த அபிமன்யு என்ற இளைஞர் தனக்கு விமான நிலையத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனை நத்தவில்லை என்றும் சுயவிவரங்களை மட்டும் பெற்றுக்கொண்டு, 14 நாட்களுக்கு சுய தனிமை படுத்திக்கொள்ளும்படி கூறி அனுப்பி வைத்ததாகவும் இதுபோன்ற செயல்களால் இந்தியா பெரிய விளைவுகளை சந்திக்க போகிறது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை கவனித்த அஹமதாபாத் விமான நிலைய நிர்வாகம் அங்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெறுவதையும் அதில் ஒருவராக அபிமன்யுவும் பரிசோதிக்கப்பட்ட விடியோவை வெளியிட்டு அபிமன்யுவை கண்டித்தது. அதன் பிறகு தனக்கு நடந்தது கண் பரிசோதனை என தான் நினைத்ததாகவும், தவறுக்கு வருந்துவதாகவும் கூறி பச்சையாக மழுப்பினார், இவரது முந்தைய பதிவுகளை ஆராய்ச்சி செய்ததில் இடது சாரி சிந்தனை கொண்டவர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அவரது டுவிட்டர் கணக்கில் கேள்விகேட்க துவங்கினர் இதனால் தனது டுவிட்டர் கணக்கை டீஆக்டிவேட் செய்து ஓடினார் அபிமன்யு.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சீனாவும், கியூபாவும் சிறந்து விளங்குவதாகவும் இந்தியா இவற்றை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கம்யூனிஸ சிந்தனையாளர்கள் கூறிவரும் நிலையில் இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 


Share it if you like it