அமெரிக்காவில் வெகு விரைவில் அதிபர் தேர்தல் வர உள்ளது. டோனால்ட் டிரம்ப்பை எதிர்த்து பெர்னி சாண்டர்ஸ் என்பவர் எதிர்க்கட்சி சார்பில் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பெர்னி தனது டுவிட்டர் பக்கத்தில் 20 கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவை தங்களது வீடாக நினைத்து வாழ்கிறார்கள்.
. @BernieSanders You are creating Hinduphobia in the hearts of Muslims for your votes. Amongst those killed in Delh are Muslims and Hindus both. 200 Million Muslims in India are as safe as others. I,being a Pakistani Muslim always feel safe in India.Bernie you are a racist https://t.co/uGDsuP2Noy
— Tahir Aslam Gora ताहिर गोरा طاہر گورا (@TahirGora) February 28, 2020
டெல்லி கலவரத்தில் மூஸ்லீம் விரோத குழு நடத்திய தாக்குதலில் இதுவரை 27 பேர் மரணமும் பலர் காயம் அடைந்து இருக்கின்றனர். அங்கு மனித உரிமை மீறப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, அமெரிக்கா உறவு தோல்வி அடைந்துள்ளது இதற்கு டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கவிஞரும், எழுத்தாளருமான தாஹிர் அஸ்லம் கோரா என்பவர் பெர்னி கருத்திற்கு டுவிட்டரில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். உங்கள் வாக்குகளுக்காக முஸ்லிம்களின் இதயங்களில் இந்துக்களின் மீது வெறுப்புணர்வை உருவாக்குகிறீர்கள்.
கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் உள்ளனர். 20 கோடி முஸ்லிம்கள் மற்றவர்களைப் போலவே அங்கு பாதுகாப்பாக வாழ்கின்றனர். நான், ஒரு பாகிஸ்தான் முஸ்லீமாக இருப்பதால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உணர்கிறேன். பெர்னி நீங்கள் ஒரு இனவாதி என்று தக்கபதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.