பாகிஸ்தான் தூண்டுதல் பெயரில் அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவி பல வன்முறை செயல்களை நிகழ்த்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் மூளைச் சலவையினால் ஜம்மூ-காஷ்மீர் பகுதியை சேர்ந்த அப்பாவி மக்களும் சமூக விரோத கும்பல்களுக்கு உதவி வருகின்றனர். இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் கிடைத்த தகவல் அடிப்படையில். தீவிரவாதிகளின் இருப்பிடத்தை, சுற்றி வளைத்து சரண் அடையுமாறு, எச்சரித்தனர். அதில் ஒரு தீவிரவாதி சரண் அடைந்தான்.
”எனக்கு சரணடைய வாய்ப்பு அளித்த, பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறுகிறேன். இப்போது நான் எனது மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவை பெருமைப்படுத்துவேன்” என்று சரணடைந்த ஜம்மூ-காஷ்மீர் தீவிரவாதி பேசிய காணொலி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Good sense prevailed!
Al-Badr terrorist surrendered during #Shopian encounter yesterday, says, “I'm is thankful to army who gave me an opportunity to surrender. Now I will complete my medical studies and bring glory to #India”. #Kashmir @hussain_imtiyaz pic.twitter.com/SLKYeM28Vg
— Azeema (@azeema_1) August 29, 2020