27ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர்களில் முதன்மையானவர் யார்? என்றால் அது வீர் சாவார்க்கர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஹிந்து மகாசபை நிறுவனர் மட்டுமில்லாது இந்துத்துவா’ தத்துவத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். தமிழக
அரசியல்வாதிகள் இன்று வரை அவரின் தியாகத்தையும், உழைப்பையும் கடுமையாக விமர்சித்து வந்தாலும். அவரின் சேவை பற்றி நன்கு அறிந்து இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வீர் சாவர்க்கரின் நினைவாக ஒரு நினைவு தபால் தலையையும் வெளியிட்டுள்ளார் என்பதில் இருந்து அவரின் பெருமையை யாரும் மறைக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய வீரத்தின் அடையாளம் வீர் சாவர்க்கர் அவரின் பிறந்த தினத்தில் கோடி கோடி வணக்கங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Bharat ke veer sapoot, kraantikaaree vinaayak daamodar saavarakar jee kee jayantee par koti-koti naman.#Savarkar
— Anis Farooqui (@anis_farooqui) May 28, 2020