வியட்நாம் நாட்டில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆறு சிவலிங்கங்கள்!

வியட்நாம் நாட்டில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆறு சிவலிங்கங்கள்!

Share it if you like it

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்னும் கருத்திற்கு ஏற்ப. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பர்மா, தாய்லாந்து, மியான்மர், எகிப்த் மற்றும் சில இஸ்லாமிய நாடுகளில் கூட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பொழுது சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வியட்நாமில் 9-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அப்பகுதியில் மிக பிரமாண்டமான சிவலிங்கம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணம்” இது என்று அழைத்துள்ளார்.. இந்தியா மற்றும் வியட்நாமின் ” கலை, கலாச்சாரம், நாகரிக இணைப்பையும், ஜெய் சங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது அக்கோவிலில் ஆறு சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it