தமிழகத்தில் ஹிந்தி திணிப்பதாக கூறிகொண்டு. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏழை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல். இன்று வரை தங்களின் சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். முந்தைய காலம் போல் அல்லாமல் தற்பொழுது தமிழக மக்கள் திமுகவின் உண்மை முகத்தை நன்கு உணர்ந்துள்ளனர். அண்மையில் திமுக டீ-ஷர்ட் நாடகத்தை மக்கள் மத்தியில் அரங்கேற்றம் செய்ய முயன்றது.
தமிழக மக்களுடன் இணைந்து நெட்டிசன்களும் திமுக மற்றும் கனிமொழியை வறுத்தெடுத்தனர். ஹிந்தி எதிர்ப்பு போராளி கனிமொழியின் உண்மை முகம் இது தான் என்று பிரபல எழுத்தாளர் மா. வெங்கடேசன் அவர்கள் ஆதாரம் வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் இந்தி எதிர்ப்புப் போராளி திருமதி.கனிமொழி அவர்கள் எட்டுபேரை கட்டாயம் இந்தி படிக்க கேந்திரிய வித்யாலயாவிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதுதான் திமுக. pic.twitter.com/6PDkwD6bkQ— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) September 9, 2020