சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி அண்மையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் நிகழ்ச்சியை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் சாகச பயணங்களுக்கு இடையே பியர் க்ரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்து வந்தார். அப்போது இந்தியா குறித்து சொல்லுங்கள் என கேட்டதற்கு, ரஜினி அளித்த பதில் பாராட்டுதலுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தியா கலாச்சாரம் பண்பாடு ரீதியாக மிகவும் வளமான நாடு.என் நாட்டினை அதேபோல் ஏழ்மை இல்லாமல் பொருளாதாரத்திலும் வளமான நாடாக பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அத்துடன் உலகில் நான்கு பெரிய மதங்கள் உள்ளன. இஸ்லாம்,பெளத்தம்,கிருஸ்த்தவம், ஹிந்து மதம். இதில் மற்ற மதங்களுக்கு உலகம் முழுக்க பல நாடுகள் உள்ளன. ஹிந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியாதான்.இன்னொன்று மிகக்சிறிய நாடான நேபாளம் மட்டும்தான்.
ஆக இந்தியா மட்டும்தான் இந்த எல்லா மதங்களுக்குமான நாடாக உள்ளது. எல்லோரையும் சகோதரர்களாக எண்ணுகிறார்கள்.இதை பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் திருட்டுத் திராவிட பெரியாரிஸ்ட்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினிக்கு எதிராக அழுது புலம்பி வருகின்றனர், இந்தியா இந்துக்களுக்கான நாடு இல்லை அனைவருக்குமான நாடு எவ்வாறு ரஜினி அவ்வாறு கூறலாம், இது மதம் ரீதியாக சொல்லப்பட்ட வார்த்தை என்று விமர்சித்து வருகின்றனர், ஆனால் ரஜினியின் கருத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகிவருகிறது.
விமர்சகர் பாக்ட்டே கூறியபோது :- இந்தியாவும், அமெரிக்காவும் மதசார்பற்ற நாடுகள்தான்.ஆனால் இங்கே உள்ளவர்கள் அமெரிக்காவை கிறிஸ்தவ நாடு என்றே கூறுவார்கள்.அதேபோல் அமெரிக்கர்கள் நம் நாட்டை இந்து நாடு என்றே கூறுவார்கள். ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை இந்துக்கள் நாடுதான் என்று தான் கூறுவார்கள். எனவே ரஜினி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.