மத்தியில் மோடி அரசு அமைந்தவுடன் அண்டை நாடுகள் முதல் உள்நாட்டு போராட்டகுழு வரை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமூகத்தோடு ஓன்றினணந்து இணக்கமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதில் மத்திய அரசு மிக கவனமாகவும் தீவிரமாகவும் ஈடுப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இயங்கி வரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎஃப்பி), மத்திய அரசுடன் கடந்த திங்கள்கிழமை சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது. 1972-ஆம் ஆண்டு முதல் போடோலாந்து தனி மாநிலம் கோரிக்கையை முன் வைத்து
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து போடோ மாணவா்கள் சங்கம் மற்றும் ஐக்கிய போடோ மக்கள் அமைப்பு ஆகியவையும் இனணந்து. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில், அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் மற்றும் (என்டிஎஃப்பி) நான்கு பிரிவுகளை சோ்ந்த தலைவா்கள், உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருப்பது சிறந்த ஆட்சிக்கு நற்சான்றாக இது திகழ்கிறது என்று கூறினால் அது மிகையன்று.
இதனை அடுத்து பேசிய அமித்ஷா ‘இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையாகும். பல சகாப்தங்களாக நிலவும் போடோ மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வை வழங்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த உடன்படிக்கை போடோ பகுதிகளின் அனைத்து தரப்பு வளா்ச்சியையும் உறுதிப்படுத்தும்.
மேலும் இது அஸ்ஸாம் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளப்படாமல் போடோ மக்களின் மொழி மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படும். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாமின் வளா்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் எதுவும் இனி விட்டுவைக்கப்படாது என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து பேசிய அஸ்ஸாம் அமைச்சா் ஹிமந்த விஸ்வா சா்மா வருகிற 30-ஆம் தேதி 1,550 (என்டிஎஃப்பி) தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க உள்ளனா். போடோ மக்களின் நன்மை கருதி, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி மதிப்பிலான பொருளாதார திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை மூலம், மாநிலத்தில் வசிக்கும் வெவ்வேறு சமூகங்களை சோ்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் ஒன்றினணந்து வாழ வழிவகை செய்யும் என்று அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது..
தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது மூண்ட வன்முறையில் அப்பாவிகள் பலர் உயிரிழந்தனா். பொது மற்றும் தனியார் சொத்துகள் பெருமதிப்பில் சேதமாகின. இதனை அடுத்து கடந்த 27 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 3-ஆவது சமாதான உடன்படிக்கை இதுவாகும்.
முதல் உடன்படிக்கை 1993-ஆம் ஆண்டு அனைத்து போடோ மாணவா்கள் சங்கத்துடன் கையெழுத்தானது. 2003-ஆம் ஆண்டு போடோ விடுதலை புலிகளுடன் 2-ஆவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து மத்திய அரசின் தீவிர முயற்சியின் பலனாக மூன்றாவது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.