கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா ஆக்கிரமிப்பு லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து பல்வேறு சிகரங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்த அதிரடி ஆபரேஷனுக்கு சீனா திபெத் மீது போர் தொடுத்த போது சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து, பின் திபெத் முழுவதையும் சீனா ஆக்கிரமித்த பிறகு இந்தியாவிற்கு அகதிகளாக வந்த திபெத்திய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட SFF (Special Frontier Force) என்ற படைப்பிரிவை இந்தியா பயன்படுத்தியதி உள்ளது.
இந்த அதிரடி ஆபரேஷனில் இந்த படைப்பிரிவை சேர்ந்த நியாம் தென்சென் என்ற திபெத்திய வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். இன்று காலை நடந்த இவரது இறுதி ஊர்வலத்தில் திபெத்திய மக்கள் பலரும் இந்திய கொடியுடன் கலந்துகொண்டதோடு மட்டுமில்லாமல் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர் மேலும் திபெத் கொடியையும் அந்த வீரரின் உடல் மீது போர்த்தி மரியாதை செய்துள்ளனர் இதனால் சீனா கலக்கம் அடைந்துள்ளது.
இந்தியாவுடன் சீனாவிற்கு போர் ஏற்படும் பட்சத்தில் திபெத்தின் சூழ்நிலை மிகவும் முக்கியம், ஆனால் அங்கு ஏற்கனவே பலவிதங்களில் சுதந்திர புரட்சி ஏற்பட துவங்கி உள்ளது அந்த புரட்சி இந்தியாவிற்கு ஆதரவாக திரும்பி உடன் இந்திய ராணுவமும் சேர்ந்துகொண்டால் சீனா துண்டு துண்டாக உடைந்து சிதறிவிடும்.
அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக திபெத்திய வீர்ர்களை இந்தோ – சீன எல்லை பிரச்சனையில் பயன்படுத்தி இருப்பது ஒரு தரமான ராணுவ நடவடிக்கையாகவே தெரிகிறது.
சீனா, உறவாடி மோசம் செய்கிறது. சீனா, திபெத் நாடுகள் அவரவர் எல்லைக்குள் இருக்கவும், சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் இந்திய ராணுவ நடவடிக்கை சரியானதே. ஐக்கிய நாடுகள் சபை, ஒரு நீண்ட கூட்ட நடவடிக்கை மூலம் எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதன்பின், அனைத்து ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில், அனைத்து நாடுகளையும், கவனம் செலுத்த செய்ய வேண்டும்.
Chanakkia has died but takan rebirth as Mr.Narendra Modi.