இரண்டாம் ஹிட்லர் ‘ஜின்பிங்கிடம் மாட்டி கொண்டு கதறும் சிறிய நாடுகள்…!

இரண்டாம் ஹிட்லர் ‘ஜின்பிங்கிடம் மாட்டி கொண்டு கதறும் சிறிய நாடுகள்…!

Share it if you like it

சீனாவிடம் அதிகம் கடன் வாங்கிய நாடுகளில் தஜிகிஸ்தானும் ஒன்று. ஜின்பிங் அரசிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால். ஒரு பெரும் நிலப்பகுதியை தஜிகிஸ்தானிடம் இருந்து கடனுக்கு பதிலாக சீனா பிடுங்கி கொண்டது. தற்பொழுது அந்நாட்டில் உள்ள 45% சதவீத நிலப்பரப்பு எங்களுடையது என்று சீனா கூறியதற்கு. தற்பொழுது தஜிகிஸ்தான் ரத்த கண்ணீர் வடிக்க துவங்கியுள்ளது.

சீனாவின் கொட்டத்தை அடுக்கும் நாடாக தற்பொழுது இந்தியா மாறியுள்ளது. வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை தற்பொழுது இந்தியாவின் பக்கம் நெருங்க துவங்கியுள்ளது. இதனை பொறுத்து கொள்ள முடியாத சீனா. இந்தியாவிடம் அதிகம் நெருக்கம் காட்டும் சிறிய நாடுகளிடம் தான் கொடுத்த கடனை திருப்பி கேட்க துவங்கியுள்ளது.

வல்லரசு நாடுகளே ரத்த கண்ணீர் வடிக்கும் நிலையில், சிறிய நாடுகளிடம் சீனா கொடுத்த கடனை இந்த சமயத்தில் திருப்பி கேட்பதன் மூலம் அதன் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

ஏழை நாடு மற்றும் சிறு நாடுகளுக்கு சீனா பணத்தை வாரி இரைக்கும்.  அதே சமயத்தில் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நேரம் பார்த்து தனது கடனை திருப்பி செலுத்துமாறு கடுமையான அழுத்தத்தை கடன் கொடுத்த நாடுகளிடம் கேட்க துவங்கும்.

பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், அந்நாட்டின் துறைமுகம் அல்லது கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை தங்களுக்கு தருமாறு மிரட்ட துவங்கி விடும் உலகின் சாபக்கேடான சீனா..

https://twitter.com/azeema_1/status/1292108600165322752


Share it if you like it