இறுதி வேட்பாளர்பட்டியல் வெளியீடு

இறுதி வேட்பாளர்பட்டியல் வெளியீடு

Share it if you like it

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான இறுதிவேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ளது. அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 ஆயிரத்து 776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.


Share it if you like it