- தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம்.
- நீட் தேர்வை ரத்து செய்வோம்.
- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறுத்துவோம்.
- டீசல் மீதான வரி குறைக்கப்படும்.
என்று பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விடியல் அரசு ஆட்சிக்கு வந்தது. அதன் பின்பு கலைஞருக்கு 39 கோடியில் சமாதி, ஈ.வெ.ரா-விற்கு 100-கோடியில் சிலை, 2,500 கோடியில் பூங்கா, மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்திற்கும் மேல் கடன் என்று தமிழக மக்களே போதும் போதும் என்று கதறும் அளவிற்கு மொட்டை அடித்த சம்பவத்தை எல்லாம் யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடியல் அரசு தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகிய தி.மு.க-விற்கு, சரியான ’நோஸ் கட்’ கிடைத்த காரணத்தினால். மக்களின் கவனத்தை மீண்டும் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இது இஸ்லாமிய சகோதரர்களை ஏமாற்றும் முயற்சி என்பது அனைவரும் அறிந்தே.