இஸ்லாம்  குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் – குவியும் பாராட்டுக்கள் !

இஸ்லாம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் – குவியும் பாராட்டுக்கள் !

Share it if you like it

கேரளாவில் காசர்கோடை சேர்ந்தவர் அப்துல்லா,இவரின் மனைவி கதீஜா.இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர் மற்றும் வளர்ப்பு மகளான இந்து மதத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் உள்ளார். இந்நிலையில் அப்துல்லா தம்பதியினர் தங்கள் வளர்ப்பு மகள் திருமணத்தை முடிவு செய்தபோது மணமகன் விஷ்ணு பிரசாத்தின் பெற்றோர், திருமணத்தை இந்து முறைப்படி நடத்த விரும்பினர். அதற்கு அப்துல்லா தம்பதியினரும் சம்மதித்தனர்.

மேலும் அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதி உள்ள மண்மோட்டு கோவிலை தேர்வு செய்து திருமணம் நடத்தினர். திருமணத்திற்கு அப்துல்லா தம்பதியினரின் அனைத்து உறவினர்களும் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

திருமணம் முடிந்த நிலையில் அப்துல்லா தம்பதி கண்ணீர் மல்க மணமக்களை ஆசீர்வாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


Share it if you like it