ஈரானில் அதிர்ச்சி – ஆல்கஹாலை குடித்தால் கொரோனாவை தடுக்கலாம் என்று நினைத்து குடித்த மக்கள் 300 பேர் பலி !

ஈரானில் அதிர்ச்சி – ஆல்கஹாலை குடித்தால் கொரோனாவை தடுக்கலாம் என்று நினைத்து குடித்த மக்கள் 300 பேர் பலி !

Share it if you like it

  • ஈரானில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. என்னவென்றால் கொரோனா வைரஸ் நமக்கு பரவாமல் இருக்க வேண்டுமென்றால் பார்மால்டிஹைடு எனப்படும் ஆல்கஹால் வகையை சேர்ந்த தொழிற்சாலை மெத்தனாலை குடித்தால் கொரோனா நோய்க்கிருமி நமக்கு பரவாது தடுக்கலாம் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இதனை நம்பி மக்கள் பலர் அதனை பற்றி தெரியாமல் வாங்கி குடித்துள்ளனர். மேலும் ஐந்து வயது குழந்தைக்கு அவரது பெற்றோர்கள் மெத்தனாலை குடிக்க வைத்துள்ளனர். இதனால் அந்த குழந்தையின் பார்வை பறிபோனது.
  • ஈரானிய சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா வைரஸின் பயத்தினால் மெத்தனாலை குடிக்காதீர்கள் அது மிகவும் ஆபத்தானது என்று அவர்களிடம் கெஞ்சியுள்ளார். மேலும் மெத்தனால் குடித்ததன் மூலம் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆல்கஹால் உள்ளிட்ட மது பானங்கள் குடிப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மெத்தனாலை உட்கொள்வது ஆபத்தானது. மேலும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் மற்றும் தோல் எரிச்சல் மற்றும் தோல் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Share it if you like it