உடல் எடை அதிகரிக்காத காய்கறி மற்றும் பழங்கள்!

உடல் எடை அதிகரிக்காத காய்கறி மற்றும் பழங்கள்!

Share it if you like it

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் குறைவான கலோரிகள் கொண்டது. இதை அதிகம் உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

பூசணிக்காய் :

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பூசணிக்காய் முக்கிய பங்கு வகுக்கிறது. பூசணிக்காயின் விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், மினரல்ஸ், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஆகியன அடங்கியுள்ளன. பூசணிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பூசணிக்காயை தாராளமாக சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. குறிப்பாக ஸ்ட்ராபெரி பழத்திற்கு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திறன் உண்டு. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

ஆரஞ்சுப் பழம் :

ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல்எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

ஆப்பிள் :

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

வெள்ளரி :

காய்கறிகளுள் குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம், வெள்ளரிக்காயில் அதிகம் உண்டு. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

தக்காளி :

தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. அதோடு அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும். தக்காளியில் கலோரிகள் இல்லாததால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம். பித்தபை கல் உடையவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.


Share it if you like it