உணவில்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் உழைப்பாளிகள் – உதவுமா பஞ்சாப் காங்கிரஸ் அரசு !

உணவில்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் உழைப்பாளிகள் – உதவுமா பஞ்சாப் காங்கிரஸ் அரசு !

Share it if you like it

  • உபியை சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ராஜிவ் காந்தி குடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அஜித்குமார் ராய் அவரது மனைவி சவிதா மற்றும் பிரன்ஷு (14), ஹிமான்ஷு (12) என இரு குழந்தைகள் ஆகியோர் வசித்து வந்தனர். அந்த குடும்பமானது அஜித்குமார் ராய் அவர்களின் அன்றாட ஊதியத்தை நம்பித்தான் இருந்தது. இந்நிலையில் அரசானது ஊரடங்கை அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. வீட்டில் ரேஷன் பொருட்களும் தீர்ந்துவிட்டது.
  • 10 நாட்களாக ரேஷன் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பலமுறை இவர்கள் காவல் துறையின் அவசர உதவி எண்ணிற்கு அழைத்தாலும் அவர்களிடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. மேலும் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அவருடைய நிலைமையை காவல் துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். ஆனால் அவர்களும் எந்த உதவியும் அளிக்காமல் வெறுங்கையுடன் வீட்டிற்கு வந்தார். மாநில அரசிடமிருந்தும், காவல் துறை அதிகாரியிடமிருந்தும் எந்த உதவியும் வராத நிலையில், மனம் உடைந்த அஜித்குமார் ராய் இரவு சமையலைறையில் உள்ள மின்விசிறியில் தூக்கும்போட முயற்சித்தார். தக்க சமயத்தில் அவரின் மனைவி பார்த்து கூச்சலிட்டு அருகில் உள்ளவர்கள் எல்லாம் விரைந்து சென்று அவரை காப்பாற்றினார்கள். இவ்வாறு மன உளைச்சலுடன் கூறினார் சவிதா
  • உணவு பொருட்களுக்காக ஒரே நாளில் 4,000 பேர் பதிவு செய்து OTP களைப் பெறுகிறார்கள். ஆனால் எங்களிடம் 1,000 பேருக்கு மட்டுமே ரேஷன் இருந்தது , அதை அனைவருக்கும் எப்படி வழங்க முடியும் ஒரு நாளில் ? அது எங்கள் தவறு அல்ல, என்று தெனாவெட்டாக கூறுகிறார் இன்ஸ்பெக்டர் முகமது ஜமீல்.

Share it if you like it