உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றமாக மாறிய சட்டமன்றம்..!

உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றமாக மாறிய சட்டமன்றம்..!

Share it if you like it

உதயநிதிக்கு சினிமாவில் கூட இவ்வளவு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் தமிழக சட்டமன்றத்தை ஒப்பிடும்போது நெட்டிசன்கள் கருத்து.

மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபடாமல், சட்டசபையை  இரண்டாவது ’அறிவாலயமாக’ தி.மு.க அமைச்சர்கள் மாற்றி வருகின்றனர் என்று நெட்டிசன்கள் முதல் பொதுமக்கள் வரை தி.மு.கவை இன்று வரை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அண்மையில் இவ்வாறு பேசியிருந்தார்.

கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை. முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என்று அவையின் பொன்னான நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்து இருந்த நிலையில். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Image

Image

Image

Image

 


Share it if you like it