திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தையை காட்டிலும் தற்பொழுது மிக கடுமையான குழப்பத்தில் இருப்பதை அவரின் டுவிட்டர் பதிவுகள், பத்திரிக்கை பேட்டிகள், மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும். விநாயகர் புகைப்படத்தை அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலைஞர் டிவியில் பணியாற்றும் பனிமலர் இது தேவையில்லாத ஆணி என்று மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மழுப்பலான அறிக்கை வெளியிட்டு ஒரு வழியாக சமாளித்தார்.
”தமிழை வளர்ப்பதற்கு டீ-ஷர்ட் போடவில்லை. இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டீ ஷர்ட் போட்டோம்” என்று அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதை தான் நாங்களும் சொல்கிறோம், திமுக என்று தமிழை வளர்த்தது குடும்பத்தை அல்லவா வளர்த்தது என்று இணையதள வாசிகள் உதயநிதியை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.