Share it if you like it
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தநிலையில் தற்போது ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.36 ரூபாய் ஆகும். இது வணிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை ஏற்றத்தில் விற்பனையாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, மாருதி இண்டஸ்லேண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்தபடியே உள்ளன. அதே நேரத்தில் ஐ.டி.சி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்காட்டவில்லை.
Share it if you like it