உலக பொருளாதார மாநாடு டாவோசில் இன்று துவக்கம்

உலக பொருளாதார மாநாடு டாவோசில் இன்று துவக்கம்

Share it if you like it

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், இன்று துவக்கவுள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நம் நாட்டைச் சேர்ந்த, பல்வேறு நிறுவனங்களின், தலைமை நிர்வாக அதிகாரிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரம், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச பொருளாதார மாநாடு நடப்பது வழக்கம். இதன்படி, இந்தாண்டுக்கான மாநாடு, இன்று துவங்குகிறது.

இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் டிரமப், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஜெர்மன் அதிபர் மெர்கல், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி, பாக்., பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, மனநிலை ஆரோக்கியம் தொடர்பாக பேசவுள்ளார். சத்குருவின் தியான நிகழ்ச்சியும் இதில் நடக்கவுள்ளது. கவுதம் அடானி, சஞ்சீவ் பஜாஜ், குமார் மங்கலம் பிர்லா, ராஜன் மிட்டல், பவன் முஞ்சால், என்.சந்திரசேகரன் உள்ளிட்ட, நம் நாட்டைச் சேர்ந்த, முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள், 100 பேரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.


Share it if you like it