விஜயலட்சுமி நாடார், மற்றும் லேகா மேனன் என்னும் இரு பத்திரிக்கையாளர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலையை பற்றி மிகவும், கீழ்த்தரமாகவும், அருவருக்க தக்கவகையில் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் என்கின்ற போர்வையில் மக்களை குழப்பி வரும் பியூஸ் மானுஸ் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சர்ச்சைகுறிய வகையில் கார்ட்டூன் வரைந்து. அனைவரின் கண்டனத்திற்கு உள்ளாகிய ஆபாச கார்டூனிஸ்ட் பாலாவும் தனது முகநூல் பக்கத்தில் அமித்ஷா உடல் நிலை பற்றி தனது வன்மத்தை கக்கியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர், என்கின்ற பெயரில் துளியும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்கள் உடல் நிலை பற்றி கிண்டல் செய்யும் இவர்களின் வன்மம் நிறைந்த எண்ணத்தையே இது காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.