Share it if you like it
- பிரபல என்.டி.டி.வி ஊடகமானது வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு கால் நடையாக சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் யமுனா நதியைக் கடந்து மறு கரைக்கு சென்று விட்டனர். இதை பார்த்த என்.டி.டி.வி பத்திரிக்கையாளர் அந்த தொழிலாளர்கள்களை மீண்டும் அந்த கரைக்கு அனுப்பி அவரை திரும்பி வர சொல்லி அவர் நடப்பதை வீடியோ காட்சியாக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- வீடியோ காட்சி எடுக்கும்போது இப்படி வா.. அப்படி நட.. முகத்தை கொஞ்சம் காட்டு என கூறியபடி ஒரு சினிமா படக்காட்சி போல எடுத்தது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முகம் சுழிக்க வைத்தது. ஊடகத்தில் காட்டப்படும் 2 விநாடி காட்சிக்காக அந்த தொழிலாளிகளை அரை மணிநேரத்துக்கு பாடாய் படுத்தியதாக கூறப்படுகிறது.
- சமீபத்தில் உஜ்ஜைனை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், சாலையில் வேண்டும் என்றே தானியங்களை பரப்பி 10 வயது சிறுமியை விட்டு அந்த தானியங்களை சேகரிக்க சொன்னது. அதை வீடியோ படம் பிடித்து பசி தாங்கமுடியாமல் ஏழை சிறுமி கீழே கிடக்கும் தானியங்களை எடுத்து தின்பதாக கூறி அந்த நிறுவனம் படத்தை பத்திரிக்கைகளிடம் கொடுத்து பிரசுரித்தது. இது குறித்து அந்த சிறுமியின் தாயார் கூறுகையில் ” சில பத்திரிகையாளர் பணம் கொடுத்து ஒரு காட்சிக்காக தன் மகளை சாலையில் அவரால் பரப்பப்பட்ட தானியங்களை பொறுக்குமாறு சொல்லி படம் எடுத்ததாக” கூறினார்.
- இவ்வாறு தன் ஊடகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதுதான் ஊடக தர்மமா என்று நெட்டிசன்கள் இதுபோல் தரக்குறைவான செயல்களில் ஈடுபடும் சில பத்திரிகை ஊடகங்களை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மற்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.
Share it if you like it