கொரோனா தொற்று இருக்கும் நபரின் வலியைப்புரிந்து கொள்ளாதவர்கள் துளியும் மனிதாபிமானம் இல்லாதவர்கள். என் குடும்பத்தைச் சாகடிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வெளியே வாருங்கள் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
வல்லரசு நாடுகளையும் தாண்டி இந்தியா சிறப்பாக கொரோனா தொற்றிற்கு எதிராக போராடி வருகிறது. மக்களும் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் சட்டத்தை மதிக்காமல் தங்கள், விருப்பபடி வெளியில் சுற்றுவதால் கொரோனா தொற்று மேலும் தாக்கும், என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் பிரபல நடிகர் சல்மான்கான் சில மக்கள் செய்யும் தவறிற்கு தனது ஆதங்கத்தை தனது டுவிட்டர் வீடியோ காணொலியாக வெளியிட்டுள்ளார்.இது ஒன்றும் விடுமுறை அல்ல வீட்டிலேயே இருங்கள், அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் உரிய பாதுகாப்புடன் வெளியே வாருங்கள். என் குடும்பத்தைச் சாகடிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வெளியே வாருங்கள்..
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினரின் உழைப்பிற்கு மதிப்பு கொடுங்கள். கொரோனா தொற்று இருக்கும் நபரின் வலியைப்புரிந்து கொள்ளாதவர்கள் துளியும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்று அக்காணொலியில் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார். மேலும் பூஜை, நமாஸ் எதுவென்றாலும் வீட்டிலேய செய்யுங்கள் என்கின்ற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Setting examples… #IndiaFightsCorona pic.twitter.com/kF2gyMK8qK
— Salman Khan (@BeingSalmanKhan) April 15, 2020