Share it if you like it
மஹாராஷ்டிரா முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், தற்போதைய துணை முதல்வருமான அஜித் பவார் மீதான ஊழல் முறைகேடு வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது அஜித் பவார் நீர்ப்பனத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது விவசாயத்தை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க ஆட்சியின்போது அஜித் பவார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க கூட்டணியில் இணைந்து அஜித் துணை முதல்வராக பதவியேற்றார். ஏற்கனவே பல்வேறு குழப்பத்தில் உள்ள மஹாராஷ்ட்ரா அரசியலில் இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it