எங்கே சென்றது கருத்து சுதந்திரம்..!

எங்கே சென்றது கருத்து சுதந்திரம்..!

Share it if you like it

மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 15-ந்தேதி டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து கூறியிருந்தார்.

இதுபற்றி கடந்த 19ந்தேதி ஹிராமனி திவாரி என்ற வாலிபர் ‘ராகுல் திவாரி’ என்ற தனது முகநூல் கணக்கில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமா்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவருக்கு மிரட்டல்கள் வந்ததை அடுத்து அவர், அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இதன்பின்பு, சாமாதன் சுக்தேவ், பிரகாஷ் கஸ்பே ஆகியோர் தலைமையில் சிவசேனாவினர் ஹிராமனி திவாரியின் வீட்டுக்கு சென்று, அவரை தாக்கி, அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவசேனாவின் பெண் தொண்டர் ஒருவர், உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக ஊடகத்தில் பதிவிட்ட நபர் மீது பீட் நகரில் வைத்து மை ஊற்றினார். ஆனால், அந்த நபரோ எதனையும் கவனத்தில் கொள்ளாமல் யாருடனோ மொபைல் போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் எவரும் தடுக்காமல் கவனித்து கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it