அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்று பாதித்துள்ள பகுதியில் மருத்துவர்கள், ஆய்வு செய்ய மேற்கொண்டனர். அப்பொழுது வன்முறை எண்ணம், கொண்ட சில நபர்கள், மருத்துவ பணியாளர்கள், மீது கொலை வெறி, தாக்குதலில் ஈடுப்பட்டனர். அக்காணொலி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும், மருத்துவர்களிடம் பெரும் பீதியையும் ஏற்படுத்தியது.
இதனை அடுத்து ஊழியர்கள் மீது, தாக்குதல் நடத்திய எம்.டி முஸ்தபா, எம்.டி.குல்ரெஸ், ஷோயிப் மற்றும் மஜீத், ஆகியோர் மீது மத்தியப் பிரதேச அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்துள்ளது. கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் பணிபுரிகிறோம்.
அண்மையில் நடந்த நிகழ்வை போல், எங்கும் பார்த்தது இல்லை. நாங்கள் கடுமையாக காயமடைந்தோம், அதை பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். எங்கள் பணியை மீண்டும், அதே பகுதியில் தொடரவுள்ளோம். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். என ’டாக்டர் ஜாகியா சயீத்’ கூறியிருப்பது. அவரின் பணியின் மீது உள்ள பக்தியை காட்டுவதாக பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.