எதிர்ப்பையும் மீறி சீன எல்லை அருகே சாலைகளை அமைத்து வரும் இந்தியா..! கதறும் சீன கம்யூனிஸ்ட் அரசு!

எதிர்ப்பையும் மீறி சீன எல்லை அருகே சாலைகளை அமைத்து வரும் இந்தியா..! கதறும் சீன கம்யூனிஸ்ட் அரசு!

Share it if you like it

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து சீனா, பாகிஸ்தான், ஆகிய நாடுகளிடம் இந்தியா இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாத இரு நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய மிரட்டலுக்கு எல்லாம் முந்தைய காங்கிரஸ் போல் நடுங்காமல். மோடி அரசு இருநாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டு வருவதை இந்தியாவோடு எல்லைகளை பகிர்ந்து கொண்டு வரும் நாடுகள் நன்கு உணர்ந்து  உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

சீன எல்லைக்கு அருகில் இந்தியா தற்பொழுது வேகமாக சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்தியா சீனாவிடம் போர் புரிய  இச்சாலைகள் உதவியாக இருக்கும் என்ற அச்சமே சீனா அலறுவதற்கு முக்கிய காரணம்.

தார்புக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி இடையே ஒரு சாலையும், சாசோமா- சாசர் லா இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இரு சாலைகளை 11,815 ஊழியர்களை கொண்டு மிக வேகமாக கட்டமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it