ஒரு அடி நிலம் கூட தர முடியாது-எடியுரப்பா பேச்சு!

ஒரு அடி நிலம் கூட தர முடியாது-எடியுரப்பா பேச்சு!

Share it if you like it

கர்நாடகம்-மராட்டிய மாநிலங்களின் எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. மொழி அடிப்படையில் அந்த மாவட்டம் தங்களுக்கு சேர்ந்தது என்று மராட்டிய மாநிலம் கூறி வருகிறது. இதனால் இருமாநிலம் இடையே பெலகாவி யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் புதிதாக சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, மராட்டியத்திற்கு சொந்தம் என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மாநில முதல்-மந்திரியை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடகத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். நமது மக்கள் சகோதரத்துவத்துடன் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒருவர் கூறிவிட்டார் என்பதற்காக குழப்பத்தை ஏற்படுத்த தேவை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.


Share it if you like it