ஒரு ஹிந்து பெண்ணுக்கும் ஒரு இஸ்லாமிய ஆணுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றும் ஆனால் அதே சமயம் அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் இந்திய சட்ட முறைப்படி பிறந்த குழந்தைகளாக கருதப்படுவார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.
முறையான திருமணத்திற்கு பிறக்கும் குழந்தைகள் எப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தந்தையின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் ஆகிறார்களோ அதேபோல இதுபோன்ற திருமணத்திற்கும் பிறந்த குழந்தைகள் தந்தையின் சொத்துக்கு வாரிசுகளாக ஆகிறார்கள்.
நீதிபதி என்.வி ரமணா மற்றும் நீதிபதி எம்.எம் சந்தான கவுடர் இவர்கள் இருவரையும் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்த போது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி முகமது இலியாஸ் மற்றும் வள்ளியம்மா என்ற தம்பதியருக்கு பிறந்த குழந்தைகள் அப்பாவின் சொத்துக்கு தாராளமாக உரிமை கொண்டாடலாம் என தீர்ப்பளித்தது.
அதே சமயம் ஒரு இஸ்லாமியர் ஒரு சிலையை வணங்கியையோ அல்லது நெருப்பை வணங்கும் ஒருவரையோ திருமணம் செய்து கொண்டால் அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட திருமணமாகவோ அல்லது நிராகரிக்கப்பட்ட திருமணமாகவோ குறிப்பிட இயலாது.
கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டிஸ்மிஸ் செய்து உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளிக்கும் பொழுது கூறியது என்னவென்றால், இந்துக்கள் என்றாலே சிலை வணங்கிகள் என்றும் அவர்கள் சிலைகளுக்கும் உருவம் கொண்ட படங்களுக்கும் மலர்கள் மற்றும் அலங்காரங்கள் செய்து கும்பிடுவதால் அப்படிப்பட்ட ஒரு இந்து பெண்ணை ஒரு இஸ்லாமியர் மணந்து கொள்வது என்பதை சட்டப்படி ஒரு அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக ஏற்க முடியாது.
இந்த வழக்கானது முஹம்மது இலியாஸ் மற்றும் வள்ளியம்மா தம்பதிகளுக்கு பிறந்த சம்சுதீன் என்கிற மகன் தனது பரம்பரை சொத்தாக கருதப்பட்ட தன் தந்தையின் சொத்து மீது வழக்கு போட்டதால் வந்தது.
இந்த திருமணத்தை அங்கீகரிக்க பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ கருத முடியாது என்பதால் மனைவிக்கு இந்த சொத்தில் எந்த உரிமையும் கொண்டாட உரிமை இல்லை என்றும் ஆனால் அதே சமயம் இந்த திருமணத்தினால் பிறந்த குழந்தை இந்த சொத்தை அனுபவிக்கலாம் என்றும் இந்த சொத்தை கோரிப் பெற அந்த மகனுக்கு அருகதை உள்ளது என்றும் தீர்ப்பளித்தது.
இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணம் என்பது ஒரு காண்ட்ராக்ட் போலத்தான் பாவிக்கப்படுகிறது. இஸ்லாமிய முறையில் மூன்று முறையான திருமணங்கள் இருக்கிறது அங்கீகரிக்கப்பட்ட திருமணம் வழக்கத்திற்கு மாறான திருமணம் மற்றும் செல்லுபடி ஆகாத திருமணம்.
செல்லுபடி ஆகாத திருமணம் என்பது சட்டப்படி தவறாகும் அது எந்தக் காரணத்தினால் சட்டப்படி தவறு என்பதற்கு பல காரணங்கள் கூறலாம் அவற்றில் ஒன்றானது இந்தத் திருமணம் நடந்ததற்கான சாட்சிகள் இல்லாததை கூறலாம் என்றும் இந்த பெஞ்ச் தீர்ப்பளித்தது.
Fantastic job done by our Army