ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள் இணைப்பு – உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் !

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள் இணைப்பு – உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் !

Share it if you like it

  • இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பயனாளிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் (எஃப்.பி.எஸ்) அதே ரேஷன் கார்டைப் பயன்படுத்தி மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கும் திட்டமாகும். அதில் முதலில் 12 மாநிங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
  • ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்கண்ட் மற்றும் திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் மட்டும் செய்லபடுத்த திட்டமிடப்பட்ட நிலையில் மேலும் 5 மாநிலங்களான பீகார், உ.பி., பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தபடுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.


Share it if you like it