Share it if you like it
- காரைக்குடியில் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் ஒரு நிகழ்வு அரங்கேற உள்ளது. என்ன நிகழ்வு என்றால், காரைக்குடியில் ஹிந்துக்களின் புனித நூலான ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பரை பெருமைப்படுத்த, கம்பன் விழா ஒன்றை நடத்த ஹிந்து மதத்தை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்து அழைப்பிதழையும் தயார் செய்தனர். இந்த நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
- இதில் விசித்திரம் என்னவென்றால், ஹிந்து மதத்தின் புனித காவியமான ராமாயணத்தை எழுதியவர் கம்பர். இதுபோன்ற ஹிந்து விழாவான கம்பன் விழாவில் உரையாற்றுவதற்காக கிறுஸ்துவ மிஷினரியை சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பருக்கு அழைப்பு விடுத்தும் அவரின் பெயரை கெளரவமாக அழைப்பிதழிலும் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சிலர் ஹிந்து விழாவில் கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரை உரையாற்ற ஏன்அழைக்க வேண்டும். கம்பர் என்ன பைபிள் இயற்றினாரா, அல்லது கம்பர் என்ன இயேசுவின் நண்பரா எனவும், விழாவில் கலந்துகொள்வதாக மட்டும் அழைப்பு விடுத்திருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்நிகழ்ச்சியில் பேருரை ஆற்ற அழைப்பு விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று இதைப்பற்றி விமர்சித்து வருகின்றனர்.
Share it if you like it