கொரோனா நோயை தடுப்பதற்காக பிரதமர் மோடி நாடு முழுவதும் 144 தடையை நடைமுறைப்படுத்தினார். இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் 144 தடையை மீறி கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான சிஐடியு (CITU) ஊழியர்கள், மதுபான கிடங்கில் மதுபான பாட்டில்களை கூட்டமாக செயல்பட்டு லாரியில் ஏற்றி கொண்டிருந்தார்கள். இதனை கண்ட ஜனம் டிவி பத்திரிகையாளர்கள் அங்கே செய்தி சேகரிக்க சென்றனர். அவர்களை கொடுரமாக தாக்கியுள்ளனர் சிஐடியு ஊழியர்கள். மேலும் கேரளா அரசு மதுபான கடைகளுக்கு தடை விதித்த இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான CITU அசுரர்களின் இந்த கீழ்த்தரமான செயலை கேரளாவின் ஆளுங்கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 144 தடையை மீறி செயல்பட்டதற்காகவும், பத்திரிகையாளர்களை தாக்கியதற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான சிஐடியு ஊழியர்கள் மீதும் அந்த நிர்வாகத்தினர் மீதும் சட்ட ரீதியாக காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் தொழிலாளர் பிரிவினரின் அட்டுழியம் – தாக்கப்பட்ட பத்திரிகையாளர் !
Share it if you like it
Share it if you like it