கற்றாழையில் பிளாஸ்டிக் பை!

கற்றாழையில் பிளாஸ்டிக் பை!

Share it if you like it

உலகெங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வர ஆரம்பித்துவிட்டது; ஆனால், பிளாஸ்டிக் பைகளுக்கு சரியான மாற்றுக்கான தேடல் இன்னும் முடிந்தபாடில்லை. மெக்சிகோவை சேர்ந்த, அதேமஜாக் பள்ளத்தாக்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வறண்ட பூமியிலும் விளையும் கற்றாழைகளிலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்க முடியும் என, கண்டறிந்துள்ளனர்.

கற்றாழையை வெட்டி, பிழிந்து கிடைக்கும், வழவழ கொழகொழ சாறில், மிருகக் கொழுப்பு, மெழுகு ஆகியவற்றை சேர்த்து, இயற்கை பிளாஸ்டிக்கை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மெக்சிகோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த இயற்கை பிளாஸ்டிக்கில் வலுவான ஷாப்பிங் பைகளை தயாரிக்க முடியும். மேலும், இதை குப்பையில் போட்டால், பத்தே நாட்களில் மட்கிப் போய்விடும்; தண்ணீரில் சில மணி நேரத்தில் கரைந்துவிடும். இதை, இதைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது.


Share it if you like it