சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேதாஜி சிலையை திறந்து வைத்து பேசினார்.
தமிழகத்தில் நேதாஜியை பிரபலப்படுத்தியவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரான அவர், நேதாஜியின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். பார்வர்டு பிளாக்கின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கு பெருமளவு ஆதரவை திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.
நமது வரலாற்று பாடப்புத்தகங்களில், உரிய அங்கீகாரம் தரப்படாமல் உள்ள சர்தார் வல்லபாய் படேல், வீர சாவர்க்கர் போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை முதன்மைப்படுத்த வேண்டும். அவர்களுடைய தியாகங்களில் இருந்து நாம் உத்வேகம் பெற்று, வலிமையான தேசத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு பேசினார்.