நேற்று முன்தினம் லடாக் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அரசிற்கு எதிராக கேள்வி எழுப்பிகிறேன் பேர்வழி என்று காங்கிரஸ் தலைவர் ரகுல்காந்தி டுவிட் செய்து நெட்டிசன்களிடம் பங்கமாக மாட்டிக்கொண்டார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் நமது ராணுவத்தினர் ஏன் ஆயுதங்கள் இன்றி அங்கு அனுப்பப்பட்டனர் என்றும் அதற்கு அடுத்த பதிவில் कौन ज़िम्मेदार है? யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என 1996-ம் ஆண்டு இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது கூட தெரியாமல் ராகுல் காந்தி செய்திருக்கக்கூடிய இந்த டுவிட், தேசிய அரசியலில் காமெடியனாக வலம்வரும் ராகுலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றாலும், 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சிக்கு இதுகூட தெரியாதா என நெட்டிசன்கள்கேள்வி எழுப்பிவருவது காங்கிரஸ் தலைமைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது