காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் நடை மதரீதியாக பிளவுபடுத்தினார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா. காங்கிரஸ் கட்சினரை கடுமையாக சாடினார். இன்று மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பேசிய அமித் ஷா, ‘இந்த மசோதாவை கொண்டுவருவதற்கான தேவை என்ன? எல்லாம் காங்கிரசார் செய்த தவறே காரணம். காங்கிரஸ் கட்சியானது மத-ரீதியாக நாட்டை பிளவுபடுத்தியுள்ளது. அதனை சரி செய்வதற்காகவே இந்த மசோதா இப்பொது கொண்டுவரப்படுகிறது.
கடந்த 1950 ஆம் ஆண்டு நேரு மற்றும் லியாகத் அலிகான் இடையே சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை இந்தியா முழுவதுமாக பின்பற்றி வருகின்றது. ஆனால் பாகிஸ்தானோ, பிரிவினைக்கு முந்தைய கிழக்கு பாகிஸ்தானோ பின்பற்றவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் ஹிந்து, கிறிஸ்தவ, சீக்கியர் போன்ற சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருகின்றனர். அவர்களை காப்பதற்கே இப்பொது சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. சட்டப்பிரிவு 14 இன்படி அனைவரும் சமம் என கூறுகின்றனர்.
பின்னர் எதற்கு சிறுபான்மையினருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன’ என எதிர்கட்சியினரை கேள்விகளால் துளைத்து எடுத்தார் . பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 293 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.