பெயருக்கு பின்னால் காந்தி என்று உள்ளவர்கள் எல்லாம் மகாத்மா காந்தி ஆகிவிடமுடியாது என ராகுல் காந்தியை, தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியாவை காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ இல்லை ‘ரேப் இன் இந்தியா’ தான் நடக்கிறது என கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இதற்க்கு பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சிகளும் பெண்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
பா.ஜ.க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்திவிட்டார், அவர் பகிரங்க மன்னிப்புக்ககோரவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “எனது பெயர் ராகுல் காந்தி தான் ராகுல் சாவர்க்கர் அல்ல. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என பதிலளித்து இருந்தார். இது பலத்த சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. பல தலைவர்கள் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் “காந்தி என்ற பின்னொட்டை உடையவர்கள் எல்லாம் மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. சாவர்க்கர் 12 ஆண்டுகள் அந்தமான் சிறையில் சித்ரவதைக்கு உள்ளானார். ஆனால் ராகுல் காந்தியால் 12 மணிநேரம் கூட சிறையில் தாக்குபிடிக்க முடியவில்லை. சாவர்க்கருக்கு எதிரான கருத்தை தெரிவித்ததன் மூலம் நாட்டிற்க்கு தியாகம் செய்த அனைவரையும் இழிவுபடுத்தியுள்ளார். ரபேல் போர்விமானத்தில் மன்னிப்பு கோரியதுபோன்று இதிலும் மன்னிப்புக் கோருவார்” என்றார்.