காற்றை மாசுப்படுத்தாத  BS-VI எரிபொருளை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு

காற்றை மாசுப்படுத்தாத BS-VI எரிபொருளை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு

Share it if you like it

உலகில் போக்குவரத்து வாகனங்களின் மூலம் ஏற்படும் காற்று மாசு, சுற்று சூழல் பாதிப்பு, அதனை சுவாசிக்கும் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள் என கூறிக்கொண்டே போகலாம். இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் காற்றை மாசுப்படுத்தாத தூய எரிபொருளுக்கு மாறி வருகிறது.

வெகுவிரைவில் இந்தியா முழுவதும் இதனை செயல்படுத்த ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கின்றன. 2018 ஆம்  ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி  டெல்லியில் BS-VI  என்னும் தூய எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்து 2019 ம் ஆண்டு ராஜஸ்தானில் 4 மாவட்டங்களிலும், உ.பியில் 8 மாவட்டங்களிலும், அரியானவில் 7 மாவட்டங்களிலும் இதனை அறிமுகம் செய்து இருந்தனர்.

2020 ஏப்ரல் 1தேதி முதல் இந்தியா முழுவதும் இதனை விரிவுப்படுத்த மத்திய முடிவு செய்துள்ளது. இதனை செயல்படுத்துவதால் பெட்ரோல் காரின் மூலம் ஏற்படும் காற்று மாசு 25% குறையும், டீசல் கார் மூலம் ஏற்படும்  மாசு 75% குறையும் என்று நம்பப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களை  மேம்படுத்த ஏற்கனவே 35,000 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it