Share it if you like it
ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து ஜமாத் காப்பாளராக மாநிலங்களவை அ.தி.மு.க. – எம்.பி. முகமது ஜான் இருந்தார். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக மாநிலங்களவையில் முகமது ஜான் ஓட்டு போட்டதால் அவர் ஜாமாத் பொறுப்பில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை ஜமாத் பொறுப்பாளர்கள் 24 பேர் நிறைவேற்றினர். அதே போல திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் வேலுார் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 64 ஜமாத் நிர்வாகக்குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
Share it if you like it