குடியுரிமை சட்ட திருத்தத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ! யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்??

குடியுரிமை சட்ட திருத்தத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ! யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்??

Share it if you like it

கடந்த வாரம் அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம், பாக், பங்களாதேஷ், ஆப்கன் நாடுகளில் மதரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

யார் இவர்கள்

1. இவர்களின் முன்னோர்கள் பிளவுபடாத பாரதத்தில் இருந்தவர்கள், நம் நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
2. தேசம் பிளவுபட்டபோது, பாகிஸ்தான் பகுதில் சொத்துக்கள் வைத்திருந்தவர்கள்
3. ஓரிரு ஆண்டுகளில் நாடு ஒன்றாகி விடும் என்று கருதியவர்கள்
4. பாகிஸ்தானில் இருந்தாலும் நமக்கு தீங்கு நேராது என்று நம்பி ஏமாந்தவர்கள்
5. 15 ஆகஸ்ட் 1947-க்குள் இந்தியாவிற்குள் வரமுடியாமல் , பாகிஸ்தான் பகுதியிலேயே மாட்டிக்கொண்டவர்கள்

மேலே சொன்ன அனைவரும் பாகிஸ்தான் (பங்களாதேஷ் உட்பட) மதரீதியான கொடுமைகளுக்கு உள்ளானவர்கள். ஆப்கானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பௌதர்களுக்கும் இந்த சட்டம் பாதுகாப்பு தருகிறது (ஆப்கனும் சென்ற நூற்றாண்டு வரை இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தது)

நம்முள் எழும் கேள்விகள்

1. பாகிஸ்தானில் ஒரு முஸ்லீம் விரட்டி அடிக்கப்பட்டால் அவருக்கு ஏன் இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்படவில்லை?

அவ்வாறு பாதிக்கப்படும் பாகிஸ்தான் முஸ்லீம், தனிப்பட்ட முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், பரிசீலித்து தகுதி இருப்பின் குடியுரிமை வழங்கப்படும். இதற்கு ஏற்கனவே சட்டங்கள் உள்ளன, தனி சட்டம் தேவை இல்லை. இவர்கள் மட்டுமல்ல, சீனாவில் உள்ள உய்கூர் முஸ்லிம்களும் உட்பட உலகில் உள்ள எந்த நாட்டவர் வேண்டுமானாலும் இந்தியாவில் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்

2. இலங்கை தமிழர்கள் (ஹிந்துக்கள்) ஏன் இதில் சேர்க்கப்படவில்லை?

1954-ல் இருந்தே இந்தியாவை பூர்வீகமாக கொண்டு இலங்கையில் வசிப்போருக்கு பிரச்சனைகள் இருந்து வந்தன. அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசு முன் வந்தது, ஆனால் இலங்கை தமிழர்கள் யாரும் அதற்கு விண்ணப்பிக்கவில்லை.

1964 மற்றும் 1974 ஆண்டுகளில் இந்தியா – இலங்கையிடயே கையெழுத்தான ஒப்பந்தம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இதன் மூலம் பல இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 1987க்கு பிறகு இங்கு வந்த இலங்கை தமிழர்கள், Person of Indian Origin என்பதற்கு பதில் Srilankan Refugees என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுவிட்டார்கள். அது தான் சிக்கலுக்கு காரணம்.

இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் மற்றும் சட்டங்களே போதுமானது. தேவைப்பட்டால் புதிய சட்ட திருத்தத்தின் மூலமோ அல்லது இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மூலமோ இது சாத்தியமாகலாம். அதற்கு உள்ளது, ஏன் இதற்கு இல்லை என கேட்பது அபத்தம். பல சர்வதேச விதிகளை கருதுவது அவசியம்

3. ஏற்கனவே சட்டம் இருக்கிறது என்றால், 3 நாடுகளின் சிறுபான்மையினரும் அதே முறையில் விண்ணப்பிக்கலாமே, ஏன் இந்த சட்டம்?

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்று சொல்வதற்காக இல்லை. நம் நாட்டில் யாரெல்லாம் இந்திய குடியுரிமை பெற தகுதி உடையவர்கள் என்றுள்ளது

26.1.1950 க்கு பிறகு இங்கு பிறந்தவர்கள் (25 ஜனவரி வரை பிறந்தவர்கள் மற்றும் வசிப்பவர்கள் குடியுரிமை தானாகவே உள்ளது)

1987ல் மாற்றம் செய்யப்பட்டது, அதன் படி குழந்தையின் பெற்றோர் இந்தியராக இருக்க வேண்டும்

12 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஒரு திருத்தம், ஒரு பெற்றோர் இந்தியராகவும், இன்னொருவர் சட்டவிரோத குடியேறியாக இல்லாது இருத்தல் வேண்டும். சானியா மிர்ஸா – சோயப் மாலிக் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கும் .

இந்த மூன்றிலும் வராதவர்களுக்கு குடியுரிமை by default கிடைக்காது, விண்ணப்பித்து பெற வேண்டும். கடந்த வாரம் அமலுக்கு வந்துள்ள சட்டத்தின் படி, மேற்படி 3 நாடுகளிலிருந்து 33000+ மக்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

4. பாகிஸ்தானிலும் சில பிரிவு முஸ்லிம்கள் கொடுமைக்குளாகிறார்கள், கொடுமைக்குள்ளான இலங்கை தமிழர்களுக்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்படவில்லை?

கேள்வி லாஜிக்காக இருந்தாலும், நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. வாழ்வாதாரம் தேடி வருவோர்க்கு புகலிடம் அளிப்பது நமது கடமை, அதே நேரம் இவர்களுடன் பல ஊடுருவல்காரர்களும் சட்டவிரோதமாக நுழைந்து விட்டார்கள். சட்டவிரோதமாக நுழைந்தவர்களை எந்த நாடும் ஏற்காது. எனவே case to case முறையில் விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே சரியான தீர்வு. இதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகலாம், ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அதுவே சிறந்தது

5. அப்படியானால் 33,000+ மக்களின் ஊடுருவல்காரர்கள் இல்லவே இல்லையா?
100% இல்லை என்று சொல்ல முடியாது, இதிலும் minimum risk உள்ளது. இந்தியாவில் பிறந்தவர்களே நாட்டிற்கு துரோகம் செய்யவில்லையா என்ன, அது போல இந்த 33,000 பேரிலும் சொற்பளவில் சட்டவிரோதிகள் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையானோர் இது தவிர்க்க முடியாதது.

5. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்களா ?

இது போன்று ஒரே ஒரு வார்த்தை கூட சட்டத்தில் இல்லை. குடியுரிமை விஷயத்தை பொறுத்தவரை இங்குள்ள ஹிந்துக்களுக்கு என்ன சட்டங்கள் பொருந்துமோ அதே சட்டங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உட்பட அனைவர்க்கும் ஒரே சட்டம் தான்

6. இலங்கை அகதிகள் வெளியேற்றப்படுவார்களா?

அகதிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள். மீண்டும் இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள் மட்டுமே அந்நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். மற்றவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும் வரை அவர்கள் இங்கே வாழலாம். அவர்களுக்கு ஓட்டுரிமை தவிர்த்து பிற அனைத்தும் கிடைக்கும்.

7. ஏன் போராட்டங்கள் நடக்கின்றன?

அயோத்தி தீர்ப்பின் போது ஹிந்து, முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டு பண்ண வெளிநாட்டு சக்திகளும், இங்குள்ள சில சுயநலவாதிகளும் நினைத்தனர். ஆனால் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்துவதுடனும் பழகுவதுடனும் அதை ஏற்று ஒற்றுமையை புரிய வைத்தனர். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே கலகத்தை ஏற்படுத்த வேறு சந்தர்ப்பம் பார்த்திருந்தவர்களுக்கு இந்த குடியுரிமை சட்டம் வாய்ப்பாக அமைந்து விட்டது. இதன் பின்னணியில் அறியாமை – அரசியல் – சுயநலம் – பணம் இப்படி எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். பொறுமையாக உட்கார்ந்து, திறந்த மனதுடன் இந்த சட்டத்தை படித்தால் உண்மை விளங்கும்.

-சிவராமகிருஷ்ணன்

 


Share it if you like it