கேரள பெண்ணை தாக்கிய கொரனோ வைரஸ்!

கேரள பெண்ணை தாக்கிய கொரனோ வைரஸ்!

Share it if you like it

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரனோ என்ற வைரஸ் பொதுமக்களிடையே பரவி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.இதனால் சீனாவில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கிடையில் சீனா செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த 30 செவிலியர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் 38 வயதான செவிலியர் ஒருவர் கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தங்கள் மாநில செவிலியர்களின் உடல் நலனை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Share it if you like it