கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் மெத்தனம் !

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் மெத்தனம் !

Share it if you like it

  • கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றது. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட மக்களை பற்றி சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கு உத்தரவை பாகிஸ்தானில் அமல்படுத்த முடியாது. ஏனெனில் இங்கு 25 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளனர். அவர்கள் அன்றாட ஊதியத்தை நம்பித்தான் உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
  • உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில் கூட ஊரடங்கு உத்தரவை பின்பற்றும்போது வெறும் 20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில் மக்களை பற்றி இம்ரான்கான் சிந்திக்காதது அபத்தமானது. மேலும் ஏழை எளிய மக்களை பற்றி இம்ரான்கான் கவலைப்படுகிறார் என்றால் அவர்களை வீட்டிலேயே இருக்க வைத்து ஊதியம் மட்டும் வழங்கியிருக்கலாம் மற்றும் நோயிலிருந்தும் தடுத்திருக்கலாம். ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற பெயரில் மற்ற வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்கள் நோயினால் பாதித்தால் பரவாயில்லையா. அனைத்து மக்களையும் சரிசமமாக நினைத்து அவர்களை காப்பாற்ற வேண்டியது அந்நாட்டு பிரதமரின் கடமை. அதனை செய்யாமல் இம்ரான்கான் சுயநலமாக இவ்வாறு முடிவெடுப்பது அருவறுக்கத்தக்கது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it