Share it if you like it
- கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நிலையில், ஓய்வுபெற்ற அரசு மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் COVID-19 க்கு எதிராக போராட உதவ முன்வந்துள்ளனர்.
- நோய்க்கான மாற்று மருந்துகள் இல்லாத நிலையில் ஓய்வு பெற போகும் மருத்துவர்கள் இந்த கடினமான நேரத்தில் நாட்டிற்கு உதவ முன்வந்து பணியாற்றுகிற நிகழ்வானது நமக்கு மகிழ்ச்சியையும் அவர்கள் நம் நாட்டின் மீது வைத்துள்ள பற்றையும் அறிய முடிகிறது.
- இந்த கொரோனா வைரஸ் உலகளவில் சுமார் 30 லட்சம் மக்களை பாதித்துள்ளது மற்றும் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
- மார்ச் 25 ம் தேதி ஓய்வுபெற்ற அரசு, ஆயுதப்படை மருத்துவ சேவைகள், பொதுத்துறை நிறுவனம் அல்லது தனியார் மருத்துவர்கள் ஆகியோருக்கு தங்கள் ஆதரவை வழங்கவும், கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் சேரவும் இந்திய அரசு
கோரிக்கை விடுத்திருந்தது. - அரசின் கோரிக்கையை ஏற்று 30,100 தன்னார்வ மருத்துவர்கள் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திடம் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share it if you like it